Tamil Sanjikai

நடிகர் தனுஷ் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் மாரி 2 , அதை திரைப்படம் வெளிவந்த அதே நாளில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக ‘மாரி 2’ உருவாகியுள்ளது. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஆட்டோ ஓட்டும் பெண்ணாக வரும் சாய் பல்லவி, அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் திரைக்கு வந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை இணையதளத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு கடந்த புதன்கிழமை நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாரி 2 படத்தை சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

0 Comments

Write A Comment