Tamil Sanjikai

பிராந்திய திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சன்சார் சிங் (வயது 70) மேற்கு உத்தரபிரதேசத்தில் நேற்று பாக்பத் மாவட்டத்தில் தனது சொந்த கிராமமான ஜிமானாவுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நபரின் தந்தையை சன்சார் சிங்கின் உறவினர் கொலை செய்ததால், அதற்கு பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

0 Comments

Write A Comment