பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர், தூத்துக்குடியில் நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதிப், அந்நாட்டு அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து சமீபத்தில் திடீரென அவர் தலைமறைவாகவே, அவரை தேடும் பணியில் அந்நாட்டு காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த சூழ்நிலையில், தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு 9 பேருடன் சென்ற கப்பல் ஒன்று திரும்பி வரும் போது அதில் 10 பேர் இருந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக,உளவுத்துறை அதிகாரிகள் கப்பலை நடுக்கடலில் வழிமறித்து விசாரணை செய்ததில் அவர், மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை அதிகாரிகள் கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்துள்ளனர். விரைவில் அவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது மாலத்தீவு நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அதிப் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments