தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தலைவர் பதவி மற்றும் பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகினார்.
இந்தநிலையில் தெலுங் கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்கிறார். ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது. தெலுங்கானா மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த அழைப்பை ஏற்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 8 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.
தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்கும் விழாவில் அரசியல் கட்சி பிரமுகர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
0 Comments