அமெரிக்காவை சேர்ந்த பழம்பெரும் ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான வூடி ஆலன் பல பன்முக திறமைகளை கொண்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட் திரையுலகில் பணியாற்றி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலனின் சொந்த மகளே அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வூடி ஆலனின் மகளான டிலான் பாரோ, தன்னுடைய 7 வயதில் தந்தை தன்னிடம் அத்துமீறியதாக கூறினார்.
இந்த குற்றச்சாட்டை ஆலன் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். எனினும் இந்த குற்றச்சாட்டால் அவரது திரையுலக வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நடிகைகள் யாரும் அவரது படத்தில் நடிக்க முன்வருவதில்லை. இந்த நிலையில், ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன், “எப்போது வேண்டுமானாலும் ஆலனுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக ” என தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, “நான் ஆலனை நேசிக்கிறேன், நான் அவரை நம்புகிறேன். அவர் எந்த குற்றமும் செய்திருக்க மாட்டார். நான் அவருடன் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்ய தயாராக இருக்கிறான்” என கூறினார்.
ஏற்கனவே ‘மேட்ச் பாயிண்ட்,’ ‘ஸ்கூப்’ மற்றும் ‘விக்கி கிறிஸ்டினா பார்சிலோனா’ ஆகிய படங்களில் ஆலனுடன் ஸ்கார்லெட் ஜோஹன்சன் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஆலன் குறித்த ஸ்கார்லெட் ஜோஹன்சனின் கருத்துக்கு ஆலன் மகள் டிலான் பாரோ மற்றும் ஹாலிவுட் நடிகைகள், பெண் இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
0 Comments