Tamil Sanjikai

கடந்த 2009-ம் ஆண்டு FL 2017 எனும் புதுவகை உருளைக்கிழங்கை கண்டறிந்து பெப்சி நிறுவனம் அதற்கான காப்புரிமை பெற்றுள்ளது. லேஸ் சிப்ஸ் தயாரிக்க பயன்படும் இந்த உருளைக்கிழங்கிற்கு பெப்சி நிறுவனம் காப்புரிமை பெற்றது தெரியாமல் குஜராத்தில் 9 விவசாயிகள் அவற்றை பயிரிட்டுள்ளனர்.

இதை கண்டித்து விவசாயிகளிம் நஷ்ட ஈடு கேட்டு பெப்சி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் பெப்சி நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கங்கள் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைநகரில் தொடங்கியுள்ள இந்த போராட்டம் படிப்படியாக தமிழகத்தின் பிற இடங்களுக்கும் பரவும் என விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment