Tamil Sanjikai

சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா சார்பாக அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை நேற்று இந்திய மகளிர் அணியின் முன்னணி வீரராக மிதாலி ராஜ் படைத்துள்ளார். முன்னதாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா நிகழ்த்திய இந்த சாதனையை தற்போது மிதாலி ராஜ் முறியடித்துள்ளார்.

ஐசிசி இந்த சாதனையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் தோனி ஆகியோரைவிட அதிக ரன் குவித்த வீரராக மிதாலி முன்னிலையில் உள்ளார் மேலும் தற்போது நடந்துவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் மிதாலி அபாரமாக ஆடி ரன் குவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்துடன் மிதாலி அடித்த அரைசதத்தின் மூலம் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 51 ரன்கள் குவித்தார் மிதாலி. ஒருநாள் போட்டிகளில் மகளிர் அணிகளுக்குள் அதிக ரன் குவித்த வீராங்கனையாகவும் மிதாலி இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment