டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்க அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெங்கு காய்ச்சல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் நிலையில் அமைச்சர் அளித்த பேட்டியில், ‘டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்கள் அச்சபட வேண்டாம்; அதே நேரம் அலட்சியமாகவும் இருக்க வேண்டாம். டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.
மேலும், டெங்கு காய்ச்சலை ஒழிக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெங்கு காய்ச்சல் குறித்து தவறான புள்ளி விவரங்கள் பரப்பப்படுவதாகவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
0 Comments