Tamil Sanjikai

பிரேசிலில் உள்ள சாவ் பவுலோ நகரில் நடைபெற்ற பேஷன் ஷோவில், பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல ஆண் மாடல் டலஸ் சுவாரஸ் கலந்துக் கொண்டார். பேஷன் ஷோவின் போது பேஷன் ஷோவின் போது கேட்வால்க் எனப்படும் பூனை நடை நடந்து விட்டு திரும்பினார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் மயங்கி விழுந்தார்.

அவருடைய முகம் பகுதியில் பலத்த காயம் நேரிட்டது. ஆனால் அங்கிருந்தவர்கள் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இருக்கும் என அப்படியே இருந்து விட்டனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் விரைந்து சென்று உடனடியாக சுவாரஸை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனக் கூறியுள்ளனர். இச்சம்பவம் அங்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment