Tamil Sanjikai

பிரபல ஹாலிவுட் நடிகரின் கோரிக்கையை ஏற்று ரஷ்யாவில் 100க்கும் மேற்பட்ட அறிய வகை திமிங்கலங்களை விடுவிக்க அந்நாட்டு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

பிரைமோர்ஸ்கி (Primorsky) என்ற இடத்தில் ஆராய்ச்சிக்காக ஏராளமான திமிங்கலங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்தத் திமிங்கலங்களை விடுவிக்கவேண்டும் என்று டைட்டானிக் பட நாயகன் லியானர்டோ டி கேப்ரியோ (Leonardo DiCaprio) கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை அறிந்த ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின், டி கேப்ரியோவின் கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அரிய வகையான பெலுகா மற்றும் ஆர்கா வகைத் திமிங்கலங்களை விடுவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கடலுக்குள் விடுவிக்கப்பட்டன.

0 Comments

Write A Comment