அந்தமான் - நிக்கோபர் கடல் பகுதியில் ராஸ், நீல் மற்றும் ஹேவ்லாக் ஆகிய 3 தீவுகளின் பெயரையம் மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதற்கான நடைமுறைகளை பெரும்பாலும் மத்திய அரசு முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, ராஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரும், நீல் தீவுக்கு ஷகீத் தீப் என்றும், ஹேவ்லாக் தீவுக்கு ஸ்வராஜ் தீப் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தமான் தலைநகர் போர்ட் பிளையரில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசியக் கொடியை ஏற்றியதன், 75வது ஆண்டை முன்னிட்டு, வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சியின்போது, தீவுகளின் பெயர் மாற்றத்தை பிரதமர் மோடி அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments