Tamil Sanjikai

லார்ட்ஸ் மைதானத்தில்நேற்று நடந்த வரும் ஆஷஸ் போட்டியின் இரண்டாம் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் ஜோஃப்ரா ஆச்சர் பௌன்ஸராக அள்ளி வீசி வந்தார். ஒவ்வொரு பந்தும் மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசப்பட்டது.

முதலில் ஒரு பந்தை ஸ்டீவ் ஸ்மித்தின் முழங்கைக்கு வீசினார் ஆர்ச்சர். அப்போதே, ஸ்மித் சற்று தடுமாறினார். எனினும் தொடர்ந்து ஆடினார். 80 ரன்களில் விளையாடிக்கொண்டு இருந்த போது, மீண்டும் ஒரு பௌன்சரை வீசினார் ஆர்ச்சர். அது ஸ்மித்தின் கழுத்துப் பகுதியை பதம் பார்த்தது. நிலை தடுமாறிய ஸ்மித் கீழே விழுந்தார். அப்போது அதைப் பார்த்து ஆர்ச்சர் சிரித்துக்கொண்டு இருந்த காட்சி பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார் ஸ்மித்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் களமிறங்கிய ஸ்மித், சில பௌண்டரிகள் அடித்து, 92 ரன்களுக்கு எல்.பி.டபுள்.யூ முறையில் அவுட்டானார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 144, 142 என இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்தார் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இன்னிங்ஸை இன்று விளையாடிய இங்கிலாந்து 258 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்கிற நிலையில் டிக்ளேர் செய்தது.

காயத்தின் வீரியம் குறையாததால், ஸ்மித் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்று காலை அவருக்கு தலைவலி அதிகமாக கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக கன்கஷன் மாற்றுவீரராக மார்னஸ் லேபுஸ்சேன் ஃபீல்டிங் செய்ய வந்தார். தலைவலி, மயக்கம் போன்ற பிரச்னைகளை கன்கஷன் விதிக்குக்க்கீழ் கொண்டு வருகிறார்கள். அணி நிர்வாகமும், ஆட்டத்தின் நடுவரும் இதுகுறித்த இறுதி முடிவை எடுக்கலாம். அடுத்த டெஸ்ட் போட்டியிலும் ஸ்மித் விளையாடமாட்டார் என சந்தேகிக்கப்படுகிறது.

ஐசிசி போட்டி நடுவரான ரஞ்சன் மடுகலேவும் ,ஸ்மித்தின் காயம் குறித்து ஆராய்ந்தார், ஆஸ்திரேலிய அணி நிர்வாகம், ஸ்மித்தை போட்டியிலிருந்து விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளது..

கடந்த மாதம் ஐசிசி தரப்பில் கன்கஷன் மாற்று வீரர் என்னும் விதி அமலுக்கு வந்தது. இதன்மூலம் ஒரு வீரர் தலைவலி, மயக்கம் போன்ற பிரச்னைகளால் விளையாட முடியாமல் போனால், அவருக்குப் பதிலாக வரும் மாற்று வீரர், பேட்டிங், பவுலிங் என இரண்டையும் மேற்கொள்ளலாம்.

ஸ்மித்துக்கு வீசிய பவுன்சர் போலவே, மாற்று வீரராக வந்த மார்னஸ் லேபுஸ்சேனுக்கு ஆர்ச்சர் பவுன்சர் வீசியது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தேநீர் இடைவேளையின் போது, ஆஸ்திரேலிய அணி 46 ரன்களுக்கு இரண்டு விக்கெடுக்களை இழந்து ஆடிவருகிறது. இந்தப் போட்டியில் இன்னும் அதிகபட்சம் 34 ஓவர்கள் வீசப்படலாம். ஆஸ்திரேலியா வெல்ல 221 ரன்கள் தேவை.

0 Comments

Write A Comment