Tamil Sanjikai

பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக்கான பாப்டா விருதுகள் லண்டனில் நேற்றிரவு வழங்கப்பட்டன. ஸ்பானிஷ் படமான "ரோமா" சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. the favourite ஏழு விருதுகளைத் தட்டிச் சென்றது.

72வது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இத்திரைப்பட விருதுகள் விழாவில் ரோமா சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது. ஆங்கிலம் அல்லாத சிறந்த வெளிநாட்டு படம் பிரிவிலும் ரோமா விருதைத் தட்டிச் சென்றது.இப்படத்தின் இயக்குனர் அல்போன்சோ குயரோன் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றார்.

சிறந்த நடிகராக, 70 களில் பிரபலமான ராக் இசைக்குழுவான "குயின்" மற்றும் அதன் பாடகர் பிரட்டி மெர்குரி யின் வாழக்கையை சித்தரிக்கும் படமான Bohemian rhapsodyயில் நடித்த ராமி மாலேக் விருது பெற்றார். சிறந்த நடிகையாக ஒலிவியா கோல்மான் விருதுபெற்றார். சிறந்த நடிகை உள்பட ஏழு பிரிவுகளில் the favourite திரைப்படம் விருதுகளைத் தட்டிச் சென்றது.

mahersha ali சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதையும் ஹாலிவுட் நடிகை ராக்கேல் வெல்ஸ் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதையும் பெற்றனர்.

சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது ஸ்பைடர்மேன் படத்திற்கு வழங்கப்பட்டது.

0 Comments

Write A Comment