வரும் 2019, ஜூலை மாதம் முதல் உணவுக்காக கடல் திமிங்கலங்கள் பிடிக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது.
கடல் திமிங்கலங்கள் அருகி வந்த நிலையில், மீனவர்கள் அவற்றைப் பிடிப்பதற்கு சர்வதேச திமிங்கல ஆணையம் தடை விதித்திருந்தது. கடந்த 1951ம் ஆண்டு முதல் இந்த ஆணையத்தில் உறுப்பினராக இருந்த ஜப்பான், தற்போது அதில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது. டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் அமைச்சரவை செயலாளர் யோஷிஹிட் சுகா இதனைத் தெரிவித்தார். ஜப்பானின் இந்த முடிவு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உணவுக்காக திமிங்கிலங்கள் பிடிக்கப்படுவது தேவையற்ற ஒன்று என ஜப்பான் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜப்பான் மக்கள் உண்பதற்கு பல்வேறு மீன் வகைகள் உள்பட ஏராளமான உணவுகள் உள்ளது, சந்தைக்கு வரும் திமிங்கல கறி காரணமாக, மக்களின் உணவுப் பழக்கம் ஒன்றும் மாறிவிடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜப்பான் கடல் பகுதியில் உள்ள திமிங்கலங்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரத்தை அரசு, உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அந்நாட்டு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
0 Comments