Tamil Sanjikai

சென்னை அயனாவரத்தில், தொட்டில் சேலையில் கழுத்து சிக்கி சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அஸ்வதி என்ற 10 வயதுச் சிறுமி, கோடை விடுமுறை விட்டதை அடுத்து , சென்னை, அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அச்சிறுமியின் அத்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனை மருத்துவமனையில் அனுமதித்து உடன் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று, வீட்டில் இருந்த அனைவரும் வெளியில் சென்று விட, அஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலை முடிந்து ஜானகியின் கணவர் வினோத் குமார் வீடு திரும்பிய போது, தொட்டில் கட்டப்பட்ட சேலையில் கழுத்து இறுக்கி அஸ்வதி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Write A Comment