தென் ஆப்பிரிக்கா மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் போல் நடித்து வந்த நபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார். அந்த பெண் மருத்துவர் இந்த நபருடன் போராடியதோடு, அவரது நாக்கையும் கடித்து துப்பியுள்ளார்.
அவர் கடித்த வேகத்தில் அந்த நபரின் நாக்கு துண்டாகிவிட்டது. நாக்கின் ஒரு துண்டை இழந்த அந்த நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் மருத்துவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தப்பி ஓட முயன்ற அந்த நபரை கைது செய்தனர். மருத்துவமனை ஒன்றிற்கு அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments