சுவாதி கொலை சம்பவம் போல் சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (14-ம்தேதி) ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவர் தேன்மொழி என்ற கூட்டுறவு பெண் அதிகாரியை வெட்டி சாய்த்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தேன்மொழிக்கு ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேன்மொழியை வெட்டிய பின்னர் சுரேந்தரும் அங்கு வந்த மின்சார ரெயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். அதில் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சுயநினைவு இல்லாத நிலையில் இருந்த சுரேந்தரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் செக்ப்பட்ட அவருக்கு ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சுரேந்தர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
0 Comments