உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில், கோம்தி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் இருந்து பெண் ஒருவர் குதித்துள்ளார். இதைக் கண்ட பொது மக்கள் அந்தப் பெண்ணை மீட்டு விசாரித்த போது, ஆட்டோ ஓட்டுநர் தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறியுள்ளார். இதை அடுத்து ஆட்டோவை விரட்டி சென்று, குறிப்பிட்ட தொலைவில் ஆட்டோவை மடக்கினர். பின்னர் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
அவரது ஆட்டோவும் அடித்து நொறுக்கப்பட்டது. பின்னர் அவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். ஆட்டோவில் இருந்து கீழே குதித்ததில் காயம்பட்ட அப்பெண், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 Comments