Tamil Sanjikai

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் பாண்டஸி/சயின்ஸ் பிக்க்ஷன் படமான "Alita: Battle Angel" உலகம் எங்கும் வசூலை வாரிக்குவிக்கிறது.

அவதார், டைட்டானிக் போன்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் திரைக்கதை எழுதி ராபர்ட் ராட்ரிக்ஸ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு விமர்சனங்கள் எதிர்மறையாக வந்த போதும் படத்தின் வெற்றி தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

15 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு மொத்தம் 200 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. ஜப்பானிய எழுத்தாளர் கிஷிரோவின் இக்கதையில் அலிட்டாவாக நடித்துள்ளவர் ரோசா சாலாசர் மேலும் கிறிஸ்டோப் வால்ட்ஸ், ஜெனிபர் கொன்னேல்லி, மிச்செல் ரோட்ரிகஸ் ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

0 Comments

Write A Comment