சென்னை பள்ளிக்கரணையில்,பேனர் விழுந்து லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம் பொறியாளரான சுபஸ்ரீ, கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். வேலை முடிந்து அவர் பள்ளிக்கரணை வழியாக வீடு திரும்பியபோது, சாலையில் டிவைடர் மீது வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று காற்றில் பறந்து சுபஸ்ரீ மீது விழுந்தது.
இதனால் தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது எதிரே வந்த தண்ணீர் லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.,இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ, கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
0 Comments