Tamil Sanjikai

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தின் நாகை, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி, கரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களுக்கும், அதுபோல திதிலி புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திற்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஜிஎஸ்டி வரி செலுத்துவோர், அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியை டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என்றும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வரி செலுத்துவோர் வரியை 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் செலுத்தலாம் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment