சாகித்ய அகாடமி விருது, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மலையாளத்தில் 'குருபூர்ணிமா’ என்னும் கவிதைத் தொகுப்பை எழுதியதற்காக பிரபல எழுத்தாளரும் ,கவிஞருமான ரமேஷன் நாயர் இந்த(2018) ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது மலையாளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கவிஞர் ரமேஷன் நாயர் கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தை சேர்ந்தவர். இவர் ஒரு வலது சாரி சிந்தனையாளர். இதுவரை 6 நாவல்கள் எழுதியுள்ளார். மலையாள சினிமாக்களுக்கு 450 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். ரமேஷன் நாயரோடு சேர்த்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இதுவரை 6 சாகித்ய அகாடமி விருதுகளும், 1 மொழிபெயர்ப்பு விருதும், 2 யுவ புரஷ்கார் விருதுகளும் கிடைத்துள்ளது.
0 Comments