அமெரிக்கா நாட்டில் பணியாற்ற வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசா பெறுவதற்காக மீண்டும் ஒரு புதிய விதிமுறையை அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுவது தான் ஹெ1பி விசா. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் ஹெச்1பி விசா பெறும் முறைகளில் பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. தற்போது, புதிதாக ‘அதிகத் திறன் மற்றும் அதிக சம்பளம்’ பெறும் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்பட வேண்டுமென புதிய விதிமுறையை ட்ரம்ப் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 65,000 வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்பட வேண்டும் என்பது அமெரிக்கா காங்கிரஸ் செனட் சபையின் உத்தரவு. இதில் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிலேயே முதுகலைப் படிப்போ அல்லது அதற்கு மேற்பட்ட உயர் கல்வி படிப்போ நிறைவு செய்திருந்தால் மேற்சொன்ன விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள். இதன்மூலம் மிகவும் தகுதி வாய்ந்த வெளிநாட்டவர்களை மட்டும் பணியமர்த்த முடியும் என உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 Comments