புதுச்சேரி ஆளுநரின் அதிகாரம் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அரசின் அனைத்து விவகாரங்களிலும் தலையிடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்த மத்திய அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்ட புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் தமது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments