சென்னை விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்டது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நேற்று, சாதீக் ஷைக் என்பவரை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர், தமது ப்ளூடூத் ஸ்பீக்கரில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பயணியை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட 1.1 கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.38 லட்சம் என தெரிய வந்துள்ளது.
0 Comments