சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று அனைத்து வயது பெண்களும் அய்யப்பனை தரிசிக்கலாம் என்று அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் சபரிமலையில் தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்களால் செல்ல முடியவில்லை.
ஆனால் கடந்த 2-ந்தேதி கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (வயது 44), பிந்து அம்மிணி (42) என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
சபரிமலையி நுழைந்த இந்த இரு பெண்களுக்கும் போராட்டகாரர்களால் அச்சுறுத்தல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு திரும்பிய கனதுர்காவை அவரது உறவினர்கள் தாக்கி உள்ளனர். இதை தொடர்ந்து அவர் பெருந்தில்மன்னாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
முன்னதாக அவரது கணவர் கனகதுர்கா காணாமல் போனதாக புகார் ஒன்று அளித்து உள்ளார்.
0 Comments