1950ம் ஆண்டிற்கு பிறகு அப்போதைய பம்பாய் மாகாணத்தில் குஜராத்தி பேசும் மக்கள் மகாகுஜராத் என்ற இயக்கத்தையும், மராத்தி பேசும் மக்கள் சம்யுக்த மகராஷ்டிர அந்தோலன் என்ற இயக்கத்தையும் தொடங்கி தங்களது மொழி பேசுவோருக்கு என மாநிலங்களை பிரிக்கக்கோரி போராடி வந்தனர். 10 ஆண்டுகாக நடைபெற்று வந்த இந்த போராட்டங்களின் பலனாக பம்பாய் மறுவரையறை சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
இதன் காரணமாக சுதந்திர இந்தியாவின் ஒருங்கிணைந்த பம்பாய் மாகாணத்தில் இருந்து மே மாதத்தின் முதல் நாளில் தான் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு மகராஷ்டிராவும், காந்தி நகரை தலைமையிடமாகக் கொண்டு குஜராத் மாநிலமும் தனியாக பிரிக்கப்பட்டது.
மராத்தி, கொங்கனி மொழி பேசுவோர் மகராஷ்டிரத்திலும், குஜராத்தி, கட்சி மொழி பேசுவோர் குஜராத்திலும் குடிபெயர்ந்தனர்.
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினத்தை மகராஷ்டிர நிவாஸ் என மகராஷ்டிராவிலும், குஜராத் நிவாஸ் என்ற பெயரில் குஜராத்திலும் அம்மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நாள், அம்மாநிலங்களில் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. பங்குச் சந்தை, அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் உட்பட பல நிறுவனங்களும் விடுமுறை விடப்படுகிறது.
0 Comments