வீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் மீது கேரள வனத்துறை சார்பில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மோகன் லாலுக்கு சொந்தமான வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் அனுமதியின்றி யானை தந்தங்கள் வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிக்கப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், யானை தந்தம் மோகன்லாலுக்கு பரிசாக கிடைத்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை, என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மீறப்பட்டு இருப்பதால், மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து மோகன்லால் உள்பட 4 பேர் மீது, கேரள வனத்துறையினர் 7 ஆண்டுகளுக்கு பின்னர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மோகன்லாலுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம், என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்
0 Comments