Tamil Sanjikai

லக்னோவில் நடந்த சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சமீர் வர்மா 16–21, 21–19, 21–14 என்ற செட் கணக்கில் சீனாவின் லு குவாங்ஜூவை போராடி வீழ்த்தி மீண்டும் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆட்டம் 1 மணி 10 நிமிடங்கள் நீடித்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 18–21, 8–21 என்ற நேர் செட்டில் சீனாவின் ஹன் யூவிடம் தோல்வியுற்று கோப்பையை கோட்டை விட்டார். இந்த ஆட்டம் 34 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது.

இதே போல் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி– சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் அஸ்வினி–சிக்கி ரெட்டி இணை ஆகியோரும் தங்களது இறுதி ஆட்டங்களில் தோல்வியை தழுவினர்.

0 Comments

Write A Comment