Tamil Sanjikai

தேர்தலில் வாக்களிக்கவும், தொடர் விடுமுறை காரணமாகவும் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமான பயணிகள் நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

முன்பதிவு செய்யாமல் பேருந்து நிலையத்திற்கு வந்தவர்களுக்கு, போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் கூறி பேருந்துகளை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு, ஜவஹர்லால் நேரு சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதனை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

ஒரு மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்து சீராகத் தொடங்கியது. தொடர் விடுமுறையையொட்டி, கூடுதலாக 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.

0 Comments

Write A Comment