கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரியும், ஆளுநர் நடவடிக்கை எடுக்கக் கோரியும் வரும் வியாழக்கிழமை ஆளுநர் மாளிகை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் சுற்றிவளைத்து ஏதோதோ பேசுவதாகவும், நேரடியாக பதில் சொல்லவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கோடநாடு விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த 14ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகவும், தமிழக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவும், நேர்மையான ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கவும் கோரி, வரும் 24ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
0 Comments