Tamil Sanjikai

இரட்டை அர்த்த வசன பாடல்களுக்கு ஆட்டம் போடும் பள்ளி மாணவிகளின் வீடியோக்களை ஆபாச இணைதளங்கள் பயன்படுத்தும் அபாயம் இருப்பதால் டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என பலரது வேண்டுகோளாக இருந்தது, மேலும் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று சிலர் வழக்கும் தொடுத்திருந்தனர்.

இதையடுத்து டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. மேலும் அந்த செயலி மூலம் எடுத்த வீடியோக்களை டி.வி.க்களில் ஒளிபரப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், டிக்-டாக் செயலி தடைக்கு எதிராக சீன நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து விட்டது.

மேலும், வழக்கின் மறுவிசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

0 Comments

Write A Comment