காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்த ரஷ்ய நடிகை ஜேன் கட்டாரியாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, விளம்பரப்பட நடிகர் ரூபேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து அண்மையில் வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில், ரஷ்யாவைச் சேர்ந்த நடிகை ஜேன் கட்டாரியா நடித்துள்ளார். அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்னை, எம்.ஆர்.சி. நகரில் வசித்து வருகிறார். இவருக்கு, விளம்பர படத்தில் நடிக்கும் ரூபேஷ்குமார் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜேன் கட்டாரியாவை, ரூபேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஜேன் கட்டாரியாவின் புகைப்படங்களை, கிராபிக்ஸ் செய்து ரூபேஷ்குமார் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தும், மிரட்டியும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசில், ஜேன் கட்டாரியா புகார் கொடுத்ததை அடுத்து, ரூபேஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
0 Comments