Tamil Sanjikai

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. 'பேட்ட' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் தற்போது ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து ஓர் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது இருவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஒய்-னாட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் புதிய தகவலாக தனுஷுக்கு வில்லனாக மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment