Tamil Sanjikai

நேபாளத்தில் மலையேற்ற வீரர்களால் அண்மையில் கண்டறியப்பட்ட ஏரி ஒன்று, உலகத்தின் உயரமான ஏரியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் சிலரால் மணங் மாவட்டத்தில் ஏரி ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது.

சமே நகராட்சிக்கு உட்பட்ட சிங்கர்கார்க பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கஜின் சாரா ஏரி, கடல்மட்டத்திலிருந்து 5,200 மீட்டர்கள் உயரத்தில் இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. இதன் உயரத்தை குழு ஒன்று அளவீடு செய்துள்ளது.

1,500 மீட்டர் நீளமும், 600 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த ஏரி உள்ளதாக நகராட்சி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி பார்க்கையில் உலகின் உயரமான ஏரியாக உள்ள டிலீசோ வினை காட்டிலும் இது உயரமாக உள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமான அளவீடுகளை மேற்கொள்ளும்போது தான் இது உலகின் உயரமான ஏரி என்று அங்கீகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நேபாளத்தின் மணங் மாவட்டத்தில் தான் டிலீசோ ஏரியும் உள்ளது. இது 4 கிமீ நீளமும், 1.2 கிமீ அகலமும், 200 மீட்டர் ஆழமும் கொண்டதாக உள்ளது.

0 Comments

Write A Comment