எகிப்தின் கடவுளான அபோபிஸ் ((Apophis)) என பெயர் சூட்டப்பட்டுள்ள மிகப் பெரிய விண்கல் ஒன்று 2029ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
இந்த விண்கல் 340 மீட்டர் நீளம் உடையதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் வரும் 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி மாலை நேரத்தில் பூமியை நெருக்கமாக கடந்து செல்ல வாய்ப்பிருப்தாக தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள், அவ்வாறு கடந்து செல்லும் போது, பூமிக்கும் விண்கல்லுக்குமான தொலைவு 31 ஆயிரம் கிலோ மீட்டர்களாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதி மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் இதனைக் காணலாம் என்று குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், இதனால் பூமிக்கு ஆபத்தில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
0 Comments