சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கடந்த 17-ஆம் தேதி வந்த ஜோத்பூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் ரயிலில் மீன் இறைச்சி என்ற பெயரில் 20 பெட்டிகள் வந்து இறங்கின. அதனை பெற்றுக்கொள்ள யாரும் வராததாலும், அதே நேரத்தில் அதில் அழுகிய வாடை வீசியதாலும் சந்தேகமடைந்த உணவு பாதுகாப்பு துறை மற்றும் ரயில்வே சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெட்டியில் இருந்த இறைச்சியில் நாயின் வாலைப் போன்ற இருந்ததால் அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். இதற்கிடையே, கைப்பற்றப்பட்டது நாய்க்கறி தான் என்று செய்திகள் பரவின. இறைச்சியை கைப்பற்றிய அதிகாரிகள் அதன் மாதிரிகளை சோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதமிருந்த இறைச்சியை கொடுங்கையூர் குப்பைக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், வேப்பரி கால்நடை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கைப்பற்றப்பட்ட இறைச்சி செம்மறி ஆட்டின் கறிதான் என்று உறுதி செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments