சட்டவிதிகளுக்கு உட்பட்டு துணைவேந்தராக அவர் தேர்வு செய்யப்படவில்லை என வழக்கு தொடரப்பட்ட நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றிய செல்லத்துரையின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது.
மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டதையடுத்து மதுரை பல்கலைக்கழகத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் மதுரை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எம்.கிருஷ்ணனை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.கிருஷ்ணன் பணியாற்றி கல்வித்துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவர் எம்.கிருஷ்ணன் என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments