திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகேயுள்ள காட்டூரில் வெந்நீர் கொட்டியதில் படுகாயம் அடைந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
கடந்த 10-ஆம் தேதி குளிப்பதற்காக வைக்கப்பட்ட வெந்நீர் தவறுதலாக குழந்தைகள் ஸ்ரீதர்சித், ஜோசித் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த குழந்தைகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அக்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments