உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் எது? என்பதை அறிவதற்காக டைம்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 92 நாடுகள் அடங்கிய 1,396 கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டன. அதன் தரவரிசைப் பட்டியலை டைம்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. முதல் இடத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், இரண்டாவது இடத்தை கலிபோர்னியா தொழில்நுட்ப கல்வி நிறுவனமும், அதைத்தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளன.
இதில் முதல் 300 இடங்களில் இந்திய பல்கலைக்கழகங்கள் எதுவும் இடம் பெறவில்லை. கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 251 முதல் 300 இடங்களுக்குள் இருந்த பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சியும் தற்போது பின்தங்கி 301 முதல் 350-வது தரவரிசைப் பட்டியலுக்கு வந்துவிட்டது. இது கவலைக்குரியது. இந்தூர் ரூபர் ஐ.ஐ.டி முதல் முறையாக 301 முதல் 350-வது இடத்தைப் பிடித்து இருக்கிறது. இது 401 முதல் 500-வது தரவரிசையில் உள்ள டெல்லி மற்றும் மும்பையைக் காட்டிலும் சிறப்பானது, இந்த வரிசைக்கு கோரக்பூர் மற்றும் டெல்லி ஐ.ஐ.டி தங்கள் நிலையை உயர்த்தி உள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவரான கபில் சிபில் கூறுகையில், “பிரதமர் மோடி பசுக்களைப் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக இந்திய பல்கலைக்கழங்களை குறித்து கவலை கொள்ளட்டும்” என்று விமர்சித்து இருக்கிறார்.
0 Comments