நடிகர் விஷால், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய இருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால், நடிகர் சங்கக் கட்டிடம் கட்டியபிறகே, திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது நடிகர் சங்கக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய இருப்பதாக, நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
அனிஷா ரெட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள விஷால், திருமணத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். விஷால் திருமணம் செய்ய உள்ள அனிஷா ரெட்டி பெல்லி சூப்புலு, அர்ஜூன் ரெட்டி ஆகிய திரைப்படத்தில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
0 Comments