Tamil Sanjikai

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை கண்டுபிடிக்க தவறியதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலை இயக்குநர் வசந்தபாலன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுமுக இயக்குநர் சீயோன் இயக்கத்தில் தயாராகியுள்ள `பொது நலன் கருதி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், வசந்தபாலன், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் வசந்தபாலன், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒழிப்பேன் என்று கூறிவிட்டு வந்த விஷால், அதனை கண்டுபிடிக்காமல் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் ஆதரவாக இருப்பதாக விமர்சித்தார். தன்னை துப்பறிவாளன், இரும்புத்திரை என சொல்லிக்கொள்ளும் விஷால், தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிப்பதில் மட்டும் தாமதம் காண்பிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் மிஷ்கின், தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிக்க விஷால் இரவு பகலாக உழைத்ததாகவும், ஆனால் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

0 Comments

Write A Comment