இலங்கையில் நிலவும் மத ரீதியிலான பதற்றம் தமிழகம், கேரளாவில் பரவாமல் தடுக்க கண்காணிப்பு பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இலங்கை அமைச்சரவையில் இருந்து இஸ்லாமிய அமைச்சர்கள் 9 பேர் அதிரடியாக பதவி விலகி உள்ளனர். இந்நிலையில் அந்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மோதல்கள் மூளக் கூடுமென அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில் இலங்கையை ஒட்டி உள்ள தமிழகம் மற்றும் கேரளாவிலும் மதக்கலவரங்களை தூண்டும் பணி நடைபெறக் கூடுமென மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து தமிழகத்திலும், கேரளாவில் கண்காணிப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே வரும் 9ம் தேதி கொழும்பு செல்லும் பிரதமர் மோடி இலங்கை பிரதமரிடம் இந்த பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
0 Comments