சந்திராப்பூர் மாவட்டம் ரஜூரா பகுதியில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான சுபாஷ் தோதே நர்சிங் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கல்லூரியின் செயலாளராக இருப்பவர் அருண் தோதே. இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்த கல்லூரியின் முதல்வர் அங்கு படித்து வரும் மாணவியை பாலியல் உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சுபாஷ் தோதே, அருண் தோதே ஆகிய இருவரும் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவியை கல்லூரி மற்றும் விடுதியில் இருந்து வெளியேற்றியுள்ளார் இதனால் அந்த மாணவி அவர் வேறு கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆன பிறகும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வும், கல்லூரி செயலாளரும் மாணவியை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவி போலீசில் மானபங்க புகார் அளித்தார்.
அதன்பேரில் சுபாஷ் தோதே மற்றும் அருண் தோதே ஆகியோரை போலீசார் கைது செய்து இருவரையும் பல்லர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர் . அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
0 Comments