இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அன்று இரவு 8 மணி அளவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது என்றும், இதற்காக பிரதமர் மன்னிப்பு கேட்க கோரியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நவம்பர் 8-ம் தேதி காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறது.
நவம்பர் 8-ம் தேதியான இன்றும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. கருப்பு பணம் ஒழிப்பு, பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுத்தல், கள்ள ரூபாய் நோட்டுகள் ஒழித்தல் போன்ற காரணங்களை அப்போது மத்திய அரசு கூறியது. ஆனால் இந்த மூன்றும் நிறைவேறவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் நாடு முழுவதும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments