ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டர் முதலமைச்சராக தொடர்வார் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது. அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்கள் புதிய உயரத்தை அடையும். ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் முதலமைச்சராக தொடர்வார்’ என்று அறிவித்துள்ளார்.
மேலும், தீபாவளி பண்டிகைக்கு மஹாராஷ்டிரா, ஹரியானாவை மக்கள் பரிசளித்துள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜக அரசின் 5 வருட உழைப்பிற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
முன்னதாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘மோடியின் முதல் ஆட்சிக்காலத்தை விட மோடி 2.0 மிகவேகமாக செயல்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் கடந்த தேர்தலைவிட இந்த முறை பாஜகவின் வாக்கு வங்கி 3% உயர்ந்துள்ளது’ என்று பேசினார்.
0 Comments