ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மேயால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாத காரணத்தால் அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை (பிரதமரை) தேர்வு செய்யும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போரிஸ் ஜான்சன் 45 ஆயிரத்து 497 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக (பிரதமராக) தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சன், நேற்று பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து ராணி எலிசபெத்தையும் போரிஸ் ஜான்சன் சந்தித்தார்.
பதவியேற்ற பின் பேசிய போரிஸ் ஜான்சன், “அக்டோபர் 31-ந் தேதி பிரெக்ஸிட் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திக்காட்டுவோம்” என உறுதிபட கூறினார். போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து தம்பதியருக்கு 1964-ம் ஆண்டு, ஜூன் மாதம் 19-ந் தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரின் மேன்ஹாட்டன் பகுதியில் பிறந்தவர்; லண்டன் மேயர் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments