Tamil Sanjikai

விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் துணைத் தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்பட 4 பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2017ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் இரண்டாவது பருவத் தேர்விலும் 2018 பிப்ரவரி, மார்ச் அரியர் தேர்விலும் வினாத்தாள் முன்னதாக வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட தற்காலிக பணியாளர்கள் தேர்வு எழுதிய மாணவர்களிடம் ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை பணம் பெற்றுக்கொண்டு கேள்வித்தாள் மற்றும் அதற்கான பதிலை எழுதுவதற்காக Answer Sheet என்கிற விடைத்தாளையும் கொடுத்தது உறுதியானது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட 37 தற்காலிக பணியாளர்களையும் அண்ணா பல்கலைக்கழகம் பணிநீக்கம் செய்தது. ஆனால், பல்கலைக்கழக தேர்வுகளில் முறைகேடு நடப்பதற்கு குற்றம்சாட்டப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியுமா? என கேள்வி எழுந்த்து.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் துணைத் தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்பட 4 பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நடவடிக்கை எடுத்துள்ளார்.

0 Comments

Write A Comment