மத்திய பிரதேசத்தில் உள்ள இந்து சாமியார்கள் தற்போது அக்கட்சிக்கு எதிராக அணி திரண்டு நிற்பதால், அம்மாநில பா.ஜ.க.வினர் கலங்கிப்போயுள்ளனர். மத்திய பிரதேசத்தில், இந்து அமைப்புகளுக்கு ஆதரவாக முதல்வர் செயல்படவில்லை என்றும் நர்மதையின் களங்கத்தை நீக்கவில்லை என்றும் கூறி, சாமியார்கள் பாஜக-வுக்கு எதிராக சாமியார்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு மடங்களைச் சேர்ந்த 11,000 சாமியார்கள் நர்மதை ஆற்றங்கரையில் பாஜக-வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும், போபாலில் இன்று மாலை மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் பாஜக-வினர் மிரண்டுதான் போயிருக்கிறார்கள்.
0 Comments