திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் ஆடம்பரச் செலவு செய்வதாகவும், ஊழல் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டிய தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் கடந்த மாதம் சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தைப் பூட்டினர்.
இதை எதிர்த்துத் தொடுத்த வழக்கில் சார்பதிவாளர் முன்னிலையில் அலுவலகத்தைத் திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அதேநேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆவணங்கள் உள்ள அறையைப் பூட்டி வைக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த மற்றொரு வழக்கில் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையைத் திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று சார்பதிவாளர் சேகர் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டிய அறையைத் திறந்து ஆவணங்களை நகல் எடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் பிரிவுக்கும் எதிர்ப்பிரிவுக்கும் கொடுத்தனர்.
0 Comments